இதுதான் சமத்துவமா? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி?

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் கோவையை தொடர்ந்து, இன்று விருதுநகருக்கு ஆய்வுக்காக சென்றுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்போது முதலமைச்சரை காண 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு காத்திருந்தனர். காரில் வந்த முதல்வர் பொதுமக்கள் மத்தியில் நடந்து சென்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது முதல்வருக்கு கை குலுக்க வநதார் ஒருவர். அப்போது முதல்வர் கையசைக்கவே, உடனடியாக அந்த தொண்டரை, அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பகிர்ந்த எதிர்க்கட்சியினர் ”தொண்டரின் கையை கூட முதல்வர் தொடமாட்டாரா, இதுதான் சமூக நீதியா? சமத்துவமா?” என காட்டமாக விமர்சித்துள்ளனர். மேலும் சிலர், பிற கட்சித் தலைவர்கள் தொண்டர்களுடன் இருப்பது போன்ற வீடியோவையும் பகிர்ந்து, வருகின்றனர்.

Leave a Response