சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் கொல்லை கிராமத்தில் மது அருந்தும் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் பாமக-விசிக வின் மோதலாக மாறியது. இந்த சம்பவத்தில் விசிக நிர்வாகிகள் செல்லதுரையை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதில் தாக்கியதாக கூறப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் விசிக மற்றும் பாமக கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய விசிக நிர்வாகி வன்னியர் சங்க தலைவர் தலையை வெட்டுவேன் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விசிக கட்சி நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திருமாவளவன் நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் இல்லை. மஞ்சள் கொள்ளை பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் வன்னியர் சமூகத்திற்கு எதிராக நடந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார். தனது கட்சியை சேர்ந்தவர்கள் மீது அப்பட்டமான பலி இருக்கும் பொழுது அதிலிருந்து தப்பிபதற்காக மொத்த காரணத்தையும் தற்பொழுது பாமக மீது சுமத்தி பேசியுள்ளார்.
மேற்கொண்டு அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்களும் வாக்களித்து தான் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்று இருக்கிறோம் என்பதை நான் பதிவு செய்கிறேன் என்றும் கூறினார்.