இனிமேல் மின்சார கட்டணம் கட்ட தேவையில்லை : தமிழக அரசு புது வியூகம்.

தமிழகத்தில் தற்போது அனைத்து குடியிருப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி கரண்ட் பிட்லே கட்ட வேண்டாம் என்ற நிலை வகையில் தமிழ்நாடு அரசு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது அனைத்து குடியிருப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 700 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இலவச யூனிட்டுக்கும் மேல் வரக்கூடிய மின்சாரம் கணக்கிடப்பட்டு அதற்கான தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மேற்கூரை சோலார் பேனல் நிறுவுவது தொடர்பானஅறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை கட்டணம் இன்றியே பயன்படுத்திக்கொள்ள முடியும். சோலார் பேனல்கள் மூலம் மின்சார வசதி பெறுபவர்களுக்கு வழங்கப்படக் கூடிய மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 கிலோ வாட் ரூ.30 ஆயிரம்,
2 கிலோ வாட் ரூ.60 ஆயிரம்,
3 கிலோ வாட் ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மேற்கூரை சோலார் பேனல் அமைப்பதற்கு ரூ.50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை செலவாகலம். இந்த தொகை சற்று அதிகமாக தெரியலாம். ஆனால் இது நாம் ஒரே ஒருமுறை செய்யக்கூடிய செலவு தான். வீட்டில் சோலார் பேனல் பயன்படுத்தினால் அரசு தற்போது வழங்கி வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் கூட உங்களுக்கு தேவைப்படாது. ஆனாலும், மழை காலங்களில் உங்களுக்கு மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. சோலார் பேனல் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக இதனை அரசு மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான www.pmsuryaghar.gov.in / www.tnebltd.gov.in ஆகிய பக்கங்களில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 10 கிலோவாட் வரை சோலார் பேனல் அமைக்க ஒப்புதல் பெறவேண்டிய அவசியம் கிடையாது. மேலும் வீட்டில் சோலார் பேனல் வைக்க விருப்பப்பட்டால் அருகில் உள்ள மின் நிலையத்தை அணுக வேண்டும். உடனடியாக அதிகாரிகள் உங்கள் விருப்பத்தின் பேரில் உங்கள் வீட்டை ஆய்வு செய்து சோலார் பேனல் வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துறைப்பார்கள். சோலார் பேனல் அமைப்பதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை நீங்கள் சேமிக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave a Response