குடிபோதையில் கத்தியை வைத்து மிரட்டிய நபருக்கு நேர்ந்த பரிதாபம்

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் கத்தியை வைத்து தகராறு செய்த நபர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாகர்கோயிலைச் சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் சுபாஷ் (30). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

அதன் பின்னர் மனைவியுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்த சுபாஷ், இரவில் மது அருந்திவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதேபோல் நேற்று இரவு 2 மணியளவில் தனது பெற்றோர் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற சுபாஷ், தனது தாயார் சுப்புலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது தடுக்க வந்த மனைவியையும் தாக்கிய அவர், கையில் கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டியுள்ளார். அச்சமயம் அவரது சகோதரர் சுந்தர் அண்ணனிடம் இருந்து கத்தியை வாங்க முயன்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவரும் கீழே விழுந்ததில் எதிர்பாராத விதமாக சுபாஷின் மார்புக்கு கீழே கத்தி ஆழமாக குத்தியுள்ளது.

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த போலிஸார் சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Response