சல்மான்கானை கொலை செய்தால் 2 கோடி சன்மானம் என்று கூறியவரை, சிறையில் வைத்து போலீஸ் கொன்றால் அவர்களுக்கு 1.11 கோடி சன்மானம் – அதிரடி ஆஃபர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் என்பவர் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ‌ கும்பலால் கொலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து கொண்டே அவர் கொலைக்கு திட்டமிட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. தற்போது லாரன்ஸ் ஃபிஷ்னோய் வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் பாபா சித்திக்கை படுகொலை செய்தது மட்டுமின்றி நடிகர் சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல்கள் விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சத்ரிய கர்னி சோனா அமைப்பு தற்போது ஒரு பரபரப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை கொலை செய்யும் காவல் அதிகாரிக்கு ரூ.1.11 கோடி ரூபாயை பரிசாக தருவதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அந்த அமைப்பின் தேசிய தலைவரான ராஜ் செகாவாத் வெளியிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவர் ராஜ்புத் கர்னி சேனா படுகொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அதிலிருந்து தான் இந்த குழுவுக்கும் பிஷ்னோய்க்கும் கர்னி சேனா அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

Leave a Response