முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், என்னப்பா இது தி.மு.க.வின் உயர்கல்வித்துறை அமைச்சருக்கு அ.தி.மு.க.வின் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் வாழ்த்தும் பாராட்டும் தெரிவிக்கிறார்.
துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு வாழ்த்தும், அவரை நியமனம் செய்த முதலமைச்சருக்கு
பாராட்டும் தெரிவிக்கிறார்.
முன்னாள் மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் ஒருவேளை
நம்மதான் தி.மு.க.வோடு தேவையில்லாம மல்லுக்கு நிற்கிறோமோ. என்ன நாஞ் சொல்றது.
அதிமுக வின் பிறப்பு நோக்கமே திமுக எதிர்ப்பு என்பதற்கு மாறாக
திமுகவை வாழ்த்துகிற பாராட்டுகிற அளவுக்கு அக் கட்சியின் செயல்பாடுகள் இருக்கிறது என்றால்
பேசாமல் அதிமுகவை திமுகவில் இணைத்து விட்டால் என்ன.. என்ன நாஞ் சொல்றது..
இந்த பதிவு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது