உல்லாசத்துக்கு அழைத்து பெண் மோசடி : Cyber crime போலீசார் அதிரடி கைது.

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 13ம் தேதி அவரது வாட்ஸ்அப் எண்ணில், ”உல்லாசமாக இருக்க பெண் தேவையா? என்று கேட்டு ஒரு மெசேஜ் வந்துள்ளது. மேலும், அந்த செய்தியில் ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து அங்குள்ள எண்ணுக்கு இந்த மேலாளர் போன் செய்தார்.. அப்போது மறுமுனையில் பேசிய பெண் 5க்கும் மேற்பட்ட இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி அதில் ஒருவரை தேர்வு செய்யும்படி கூறியுள்ளார். விக்னேஷ் ஒரு பெண்ணின் புகைப்படத்தையும் தேர்வு செய்து அனுப்பியுள்ளார். அப்போது அந்த பெண் ஒரு இரவுக்கு 10,000 ரூபாய் வீதம் பேரம் பேசி 5,000 ரூபாய் முன்பணமாக மொபைல் போன் மூலம் பெற்றுள்ளார்.

பின்னர் அந்த பெண் முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு வந்து காத்திருக்குமாறு கூறினார்.. விக்னேஷ் அங்கு செல்ல விரும்பினாலும் அந்த பெண் வரவில்லை.. 5 மணி நேரம் அதே இடத்தில் காத்திருந்தார்.. அதன் பிறகு தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விக்னேஷ், உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீஸார், சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கிக் கணக்கு மற்றும் அவரது தொடர்பு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தியபோது, ​​காயத்ரி என்ற பெண்தான் தனி நபராக துணிச்சலாகச் செயல்பட்டது தெரிய வந்தது. இந்த பெண் கடலூரைச் சேர்ந்தவர்.. வயது 35.. காயத்திரி இப்படி 100க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார்..

மேலும் இன்ஸ்டாகிராமில் பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிறக்கம் செய்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.இதையடுத்து புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் காயத்திரியின் வங்கிக் கணக்கை அதிகாரிகள் சோதனை செய்தனர்.. கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ.4 லட்சத்துக்கும் மேல் ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 2 ஆயிரம் 100க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெண் ஆசையை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த காயத்திரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Response