ரத்த வெள்ளத்தில் 3 வயது சிறுவன் : தமிழ்நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி.

திருநெல்வேலியில் 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதனை தடுக்க மாநில அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் நின்றபாடில்லை.

இப்படியான சூழலில், தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் இன்று கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, நெல்லையில் 3 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவதாக சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் உள்ளான். இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு வீட்டின் முன்பு 3 வயது சிறுவன் விளையாட்டிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளான். இதனால், அப்பகுதி முழுவதும் பெற்றோர்கள் தீவிரமாக தேடியுள்ளார்கள்.

ஆனால், சிறுவன் எங்கேயும் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காணாமல் போன சிறுவனை தேடியுள்ளனர். அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் போலீசார் தேடினர். அப்போது, விக்கேன், ரம்யா தம்பதியின் எதிர்வீட்டில் சென்று சோதனை செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் எதிர்வீட்டில் இருக்கும் பெண் தங்கமாள் ஓட முயன்றார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்தும், அவரது வீட்டிலும் சோதனையிட்டனர். சோதனையில் அவரது வீட்டில் உள்ள ஒரு சாக்குப் பை ரத்தக் கறையுடன் இருந்துள்ளது. இதனை திறந்து பார்த்தபோது சாக்கு பையில் சிறுவன் சடலமாக கிடைந்தது தெரியவந்தது. இதனால் சிறுவனின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இதனை அடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் தங்கமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இந்த கொலைக்கான காரணங்கள் சில வெளிவந்துள்ளன. அதன்படி, கைதான தங்கம்மாளின் மகன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். தங்கமாள் மகன் இறந்த பிறகு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்தார். மகன் இறந்ததில் இருந்தே தங்கமாள் மன உளைச்சலில் இருந்ததாகவும், லேசான மனவளர்ச்சி குன்றி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தங்கம்மாள் மகனின் இறுதி சடங்கில் எதிர்வீட்டில் இருக்கும் ரம்யா விக்னேஷ் தம்பதி கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. ஏற்கனவே தங்கமாளுக்கும் இவர்களுக்கு பிரச்சனை இருந்துள்ளது.

இப்படியான சூழலில் தான் ரம்யா விக்னேஷ் தம்பதியின் 3 வயது குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கா? வேறு என்ன காரணம்? என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு ஆளும் கட்சி பொறுப்பேற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ளார்.

Leave a Response