அம்மா உணவகத்தில் ஆய்வுக்காக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உணவை ருசி செய்துவிட்டு எச்சில் சாப்பாட்டை அதன்மீதே உதறிவிட்டு சென்றார்.
சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார். தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் ஸ்டாலின், சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் அறிவுறுத்தினார்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்,
ஸ்டாலின் தூஉம் மழை 🤧 pic.twitter.com/xALUfErpNk— Sanghi Prince 🚩 (@SanghiPrince) July 19, 2024
இந்நிலையில் அம்மா உணவகத்தில் ஆய்வுக்காக சென்ற மு.க. ஸ்டாலின், அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த சாம்பார் சாதத்தை ருசி செய்துவிட்டு எச்சில் சாப்பாட்டை அதன்மீதே உதறிவிட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை பெற்றுவருகிறது.
பொதுமக்களுக்காக வைத்திருக்கும் உணவை வெறும் கையில் எடுத்து சுவைத்துவிட்டு, கையிலிருந்த மீதமிருந்த எச்ச உணவை மீண்டும் அதே பாத்திரத்தில் உதறுவது தான் திராவிட மாடலா? என சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனியாக ஒரு தட்டிலோ அல்லது ஸ்பூனிலோ எடுத்து சுவைத்திருக்கலாம் என்றும் அறிவுறுத்திவருகின்றனர்.



