குற்றவாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும் நடிகர் மோகன் படங்கள்!

1984 ஆம் ஆண்டு நடிகர்கள் மோகன், விஜயகாந்த், சத்யராஜ், நளினி மற்றும் பலர் நடித்து, மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் நூறாவது நாள். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து சென்னையில் ஆட்டோ சங்கர் என்கிற ஒரு கொடூர கொலைகாரன் கைது செய்யப்பட்டான். ஆட்டோ சங்கர் செய்த கொலைகள் சீரியல் கில்லிங் என்று குறிப்பிடப்பட்டு வந்தது.

ஆட்டோ சங்கர் கொலை செய்த விதம் ‘நூறாவது நாள்’ திரைப்பட பாணியை அவர் பின்பற்றியதாக பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி விசாரிக்கையில், அவரை கொலை செய்தவர்கள் உணவு விநியோகம் (ஃபுட் டெலிவரி) செய்யும் நபர்கள் போல் ஆடை அணிந்து வந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1980 காலகட்டத்தில் தமிழ் திரையில் கொலாச்சி வந்த முன்னணி நடிகர்களில் மோகனும் ஒருவர். 1977 ஆம் ஆண்டு ‘கோகிலா’ என்ற கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான மோகன், 1980 ஆம் ஆண்டு ‘மூடு பனி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகம் ஆகி இதுவரை சுமார் 100 படங்களையும் தாண்டி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்து வந்தார். தமிழில் ‘சுட்ட பழம்’ என்னும் திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடித்து தோல்வியை சந்தித்தார் மோகன். சுமார் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ‘ஹரா’ என்னும் திரைப்படம் மூலமாக ரீ-என்ட்ரி கொடுத்தார். சாரு ஹாசனை கதாநாயகனாக வைத்து ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ திரைப்படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி, ‘ஹரா’ என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மோகனுக்கு மீண்டும் கதாநாயகனாக ரி-என்ட்ரி கொடுத்தார்.

விஷயம் என்னவென்றால் ‘ஹரா’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் மோகன் உணவு விநியோகம் (ஃபுட் டெலிவரி) செய்யும் நபரைப் போல் வேஷமிட்டு, வில்லன் இடத்திற்குள் நுழைந்து, வில்லனான சுரேஷ் மேனனை தாக்குவார். சமீபத்தில் நடந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை பார்க்கும் போது, கொலைகாரர்கள் மோகன் நடித்த ‘ஹரா’ திரைப்படத்தை பார்த்து மோகனைப் போல் அவர்களும் உணவு விநியோகம்(ஃபுட் டெலிவரி) செய்யும் நபர்களைப் போல் வேஷமிட்டு வந்து ஆர்ம்ஸ்டாங் கொலையில் ஈடுபட்டார்களோ என தோன்றுகிறது.

இதைப் பார்க்கும்போது, மோகனின் ‘நூறாவது நாள்’ மற்றும் ‘ஹரா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் கொலைகாரர்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்க உதவியுள்ளதாகவே தெரிகிறது.

Leave a Response