பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி பெரம்பூரில் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலாளர் ஜெய்சங்கர் என்பவர் ராகுல்காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன் மற்றும் அவரது தந்தை ரவுடி நாகேந்திரனும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் இருவரும் சிறையில் உள்ளனர். அஸ்வத்தாமன் செல்வப்பெருந்தகையும் தான் தொழிலதிபர்களை மிரட்டி வாங்கிய பணத்தின் ஒரு பகுதியை கொடுத்து வந்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்க் படுகொலையில் செல்வப்பெருந்தகைக்கும் பங்குண்டு என்று அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. செல்வபெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்பதால் ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் அவரைக் கைது செய்ய தயக்கம் காட்டுகின்றனர். செல்வப் பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.