வருமானவரித்துறையினர் அனுப்பிய எச்சரிக்கை செய்தி!

இந்தியாவில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி வருமானவரித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.இது தனியார் மற்றும் அரசு பணியாளார் என இருவருக்கும் பொருந்தும்.

வருமான வரிக்கணக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது உண்மையான ஆவணங்கள் தான் சமர்பிக்க வேண்டும்.ஆனால் ஒரு சிலர் தவறான Document-களை கொடுக்கிறார்கள்.மேலும் அரசு தரும் சலுகைகள் பெற நினைத்து வருமானத்தை குறைத்துக் காட்டுவதற்காக ,அவர்கள் தவறான பல குறுக்கு வழிகளை முயற்சி செய்கின்றனர்.இந்த வசதிகளைப் பெற்று தர அதிக போலி ஏஜென்ட்டுகள் நடமாடுகிறார்கள்.

ஆனால் இந்த மாதிரி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான தண்டனைகள் எடுக்கப்படும் என வருமான வரித் துறை அலுவலகம் எச்சரித்துள்ளது.
இந்த தவறான செயல்களை பயன்படுத்தாமல் , பொது மக்கள் சரியான முறைகளை பின்பற்றி வருமான வரி ரிட்டர்ன்ஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தெற்கு மத்திய ரயில்வேயுடன் (SCR) இணைந்து சமீபத்தில் விஜயவாடாவில் ‘அவுட்ரீச்’என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வருமான வரித் துறை சார்பாக நடத்தப்பட்டது.இதன் நோக்கம் வருமானவரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்துவது மற்றும் வருமான வரிக்கணக்கு ரிட்டர்ன்-யை எந்தவித முறைகேடுகள் இல்லாமல் பெறுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் இடம் பெற்றன.

வருமான வரிக்கணக்கு ரிட்டர்ன் தாக்கல் செய்தும் கிடைக்காமல் இருப்பவர்கள் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணயதள முகவரியை லாகின் செய்து தங்களுது Status-கள் பற்றிய நிலையினை தெரிந்து கொண்டு விடுபட்ட ஆவணங்கள் ஏதாவது இருந்தால் அதனை Upload செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Response