அரசு ஊழியர்களின் வாக்கு பாஜக பக்கம் திரும்பி உள்ளதா?

தமிழ்நாடு அரசுக்கு சென்ற ஒரு ரிப்போர்ட்டை படித்ததும்.. சட்டென சுதாரித்து முதல்வர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.

திமுகவிற்கு கெட்ட செய்தியாக வந்த அந்த ரிப்போர்ட்டை உடனே சரி செய்யும் விதமாக அதிரடியாக செயல்பட்டு முக்கிய உத்தரவு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு சென்ற அந்த ரிப்போர்ட்டில், பொதுவாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 95 சதவீத ஆதரவு எப்போதுமே திமுகவுக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதனால் கடும் அதிருப்தியடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடிவெடுக்க வேண்டும் என தீர்மானித்திருந்தனர். அந்த வகையில் அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.

அதற்கு உதாரணமாக, தபால் வாக்குகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசு ஊழியர்கள். தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்களும் வயதில் மூத்தவர்களும் தபால் வாக்குகள் பதிவு செய்ய வழி வகை உண்டு. அந்த வகையில், முதியவர்கள் வாக்களித்தனர்.

தபால் வாக்குகள் சரிவு: எண்ணிக்கையின்படி இது மிக குறைவு. ஆனால், தேர்தல் பணிகளில் ஈடுப்பட்ட அரசு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் முழுமையாக தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பதிவான மொத்த தபால் வாக்குகளின் எண்ணிக்கை 2,48,416. இதில் திமுக கூட்டணிக்கு 1,11,150 வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 62,707 வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 50, 241 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 24,318 வாக்குகளும் கிடைத்துள்ளன.

பொதுவாக, திமுக 95 சதவீத வாக்குகளும், மீதமுள்ள 5 சதவீத வாக்குகள் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் கிடைக்கும். அதனால் திமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும், அடுத்த நிலையில் வருகிற அதிமுக வாங்கும் தபால் வாக்குகளுக்கும் இடைவெளி பெரிதாக இருக்கும். ஆனால், இந்த முறை பதிவான தபால் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகத் தான் திமுகவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல, தபால் வாக்குகளில் எப்போதும் இரண்டாவது இடத்தில் இருக்கும் அதிமுக இந்த முறை மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் பாஜக வந்துள்ளது.

ஸ்டாலின் கண்கள் சிவந்தது: இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தபால் வாக்கு களிலேயே திமுக 50 சதவீதத்துக்கும் குறைவாக அதாவது 45 சதவீதம் மட்டுமே எடுத்திருக்கும் போது, வாக்குப் பதிவில் எந்தளவுக்கு திமுகவுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வாக்களித்திருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கணக்கிட்டு, ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் விவரித்துப் பேசுகிறார்கள்.

திமுகவுக்கு எதிரான மனநிலையில் அரசு ஊழியர்கள் இருந்திருப்பது மட்டுமல்லாமல், இரண்டாவது இடம் வருவதற்கேற்ப பாஜகவை அரசு ஊழியர்கள் ஆதரித்திருப்பதும் உற்று கவனிக்க வேண்டிய விசயம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, திமுக உற்று கவனிக்க வேண்டும் என்கின்றனர்.

ஸ்டாலின் ஆக்சன்; கடந்த முறை தமிழ்நாடு – புதுவை சேர்ந்து 39 இடங்களில் வென்றது திமுக. இந்த முறையும் தமிழ்நாடு லோக்சபா தேர்தலில் திமுக இமாலய வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி உட்பட 40 இடங்களில் 40லும் திமுக வெற்றி பெற்றுள்ளது. . பாஜக தென்சென்னை, நெல்லை தவிர எங்கும் கடும் போட்டி கொடுக்கவில்லை.

பாஜக நெல்லையில் முன்னிலை வகித்த நிலையில் அங்கே பின்னடைவை சந்தித்தது. கடந்த தேர்தலில் வென்ற ஒரு இடத்தை.. அதாவது தேனியையும் இழந்து அதிமுக படுதோல்வி அடைந்து உள்ளது. தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில் முக்கியமான ஆராய்ச்சி ஒன்றில் திமுக இறங்கி உள்ளதாம்.

நேற்று ஆய்வு: அந்த வகையில், திமுக தரப்பில் நேற்று இரவு முக்கியமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது; அதன்படி, தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றிருந்தாலும் முந்தைய தேர்தல் முடிவுகளை கணக்கிடும் போது வாக்கு சதவீதம் திமுகவுக்கு குறைந்திருப்பதாகவே தகவல் சொல்லப்படுகிறது.

உத்தரவு: இந்த நிலையில், தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் திமுக பெற்ற வாக்குகள், எதிர்க்கட்சி கள் பெற்ற வாக்குகள், எந்தெந்த தொகுதிகளில் திமுக வலிமையான வாக்குகளை வாங்கியுள்ளது? எந்தெந்த தொகுதிகளில் திமுக சரிவை சந்தித் திருக்கிறது ? சரிவு ஏற்பட்டிருந்தால் என்ன காரணம் ? உள்ளிட்டவைகளை ஆராய்ந்து முழுமையான ரிப்போர்ட் ஒன்றை தரச் சொல்லி குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்டாலின்.

ரிப்போர்ட்; இதன் மூலம் கிடைத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில்தான் எப்போதும் 4 சதவிகிதம் உயர்த்தப்படும் அகவிலைப்படி 9 சதவிகிதம் இந்த முறை உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும்.

இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது முறை: ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Response