மருமகனுடன் உல்லாசம் : மனைவிக்கு கத்திகுத்து

சமயம் கிடைக்கும் போதெல்லாம் மருமகனுடன் உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காத மனைவி! இறுதியில் நடந்தது என்ன?

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மருமகனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டுகொல்லகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி(40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா(36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பழனியின் வீட்டில் அவரது அக்கா மகன் மாரியப்பன் (25) தங்கி பேக்கரி ஒன்றில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அவருக்கும் சத்யாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமை கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்று பழனி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் அவரது மகன்களும் வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாரியப்பன் மற்றும் சத்யா இருவரும் கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அந்த நேரம் வெளியே சென்ற கணவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது இருவரும் உல்லாசமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் கத்தியை எடுத்து மனைவி சத்யாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது மட்டுமல்லாமல் மருமகன் மாரியப்பன் கழுத்தையும் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பழனியை தேடி வருகின்றனர்.

Leave a Response