தமிழக அரசின் புதிய வாட்ஸ் ஆப் சேனல் : மக்கள் ஆதரவு.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ள புதிய whatsapp சேனல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

“TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் புதிய வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்ள புகைப்படத்தில் இருக்கும் QR code ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம். தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள அனைத்து திட்டங்கள் குறித்து இந்த whats app சேனலில் பொது மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Response