2018ல், இந்திய அதிபரின் மாதச் சம்பளம் ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தமது வரவு செலவுத் திட்ட அறிக்கையின்போது சம்பள உயர்வை அறிவித்திருந்தார். இந்திய அதிபரின் சம்பளம் கடைசியாக 2006 ஜனவரியில் மாற்றி அமைக்கப்பட்டதாக அவர் அப்போது கூறியிருந்தார்.விமானத்திலும் ரயிலிலும் இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் அதிபர் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம். அதிபர் தம்முடன் சேர்த்து ஒருவரை அழைத்துச் செல்லலாம். அவருக்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும்.
துணை அதிபர்
திரு ஜெட்லி ஆற்றிய அதே வரவுசெலவுத் திட்ட அறிக்கையில், இந்திய துணை அதிபரின் மாதச் சம்பளம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்திருந்தார்.
பிரதமர்
இந்தியப் பிரதமருக்கு மாதச் சம்பளமாக ரூ.1.66 லட்சம் கிடைப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரதமரின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிப்பட்ட சிறப்புப் பாதுகாப்புக் குழு எல்லா நேரமும் பணியில் ஈடுபடுத்தப்படும்.பிரதமரின் அதிகாரபூர்வப் பயணங்களுக்காக ஏர் இந்தியா ஒன் பிரத்தியேக விமானம் சேவை வழங்கும்.தலைநகர் புதுடெல்லியில் உள்ள எண் 7 ரேஸ் கோர்ஸ் ரோடு, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமாக விளங்குகிறது.