பெரும் பிரபலங்கள் நடிக்கும் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது

பிரபலங்கள் நடிக்கும் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டும். அதிலும் பெரும் பிரபலங்கள் என்றால் கேட்கவா வேண்டும்? இந்தி உலகில் பெரும் பிரபலமான அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகர்ஜூனாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். மற்றொரு ஆச்சர்யம் என்னவென்றால், இப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இதைத்தவிர வேறு என்ன வேண்டும்.

நடிகர் நாகர்ஜீனா, இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார்.

பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு, பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த வருட இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து வகையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இப்படம் தமிழ், இந்தி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தின் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Response