நாகர்ஜுனா மற்றும் கார்த்தி ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்பில் “தோழா”:

Thozha
தெலுங்கு படஉலகின் முன்னணி நட்சத்திரமான நாகர்ஜுனா மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து “தோழா” என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனித்தனியாக படப்பிடிப்பு நடத்தினர். “தோழா” தெலுங்கில் “ஒப்பிரி” என்று பெயரிடப்பட்டுள்ளது. நாகர்ஜுனா மற்றும் கார்த்தியுடன் தமனாவும் இனைந்து நடித்துள்ளனர். கார்த்தியும் தமனாவும் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கியுள்ளார். வம்சி தெலுங்கில் மூன்று படங்கள் இயக்கி அதில் இரு படங்கள் வெற்றி படங்கள். “தோழா” சுமார் அறுபது கோடி ருபாய் பொருட்செலவில் PVP சினிமாஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. “Troy” மற்றும் “Mission Impossible” ஆகிய ஆங்கில படங்களுக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்த கலோயன் ஓடினிச்சரோவ் இப்படத்துக்கு ஸ்டன்ட் காட்சிகள் அமைத்துள்ளார். கலோயன் ஓடினிச்சரோவ், விஜய் நடிக்கும் “தேறி” திரைப்படத்திற்கும் ஸ்டன்ட் காட்சிகள் அமைத்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. P.S.வினோத் ஒளிப்பதிவை கையாள, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

“தோழா” படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கார் ரேஸ் காட்சி செர்பியா நாட்டிலுள்ள பெல்க்ரடே நகரில் தொடர்ந்து பாத்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தி கார் ரேஸ் காட்சிகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

“தோழா” வருகின்ற வெள்ளிகிழமை(மார்ச் 25) உலகமெங்கும் வெளிவருகிறது. நாகர்ஜுனா மற்றும் கார்த்தி ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மிக எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர் என திரையரங்க வட்டாரங்கள் சொல்கின்றன.

2 Comments

  1. Nagarjun is a great actor and also a iconic actor in telugu cine industry. This thola is going to be a most strongest movie in script wise.

Leave a Response