“தோழா” – விமர்சனம்:.

Thozha Review
நடிகர்கள்: சீனுவாக கார்த்தி, விக்ரமாக நாகர்ஜுனா, கீர்தியாக தமனா, சீனுவின் தாயாக ஜெயசுதா, பிரசாந்த் ராவாக பிரகாஷ் ராஜ், வழக்கறிஞர் லிங்கமாக விவேக், மனோபாலா, கல்பனா(சமீபத்தில் மறைந்த நடிகை), சந்தான பாரதி, ப்ளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: பாடல்களை மதன் கார்கி எழுத, வசனத்தை ராஜு(குக்கூ பட இயக்குனர்) முருகன் எதார்த்தமாக எழுதியுள்ளார். ஒளிப்பதிவை P.S.வினோத் கையாள, K.L.பிரவீன் நறுக்கென்று படத்தொகுப்பை செய்துள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். PVP சினிமாஸ் படத்தை தயாரிக்க, தெலுங்கு பட உலகின் பிரபல இயக்குனர் P.வம்சி இயக்கியுள்ளார்.

“தோழா” அன்பு, நட்பு மற்றும் காதல் இவையின்றி மனுஷன் இல்லை என்பதை பிரமாதமாக உணர்த்தும் படம். கோடீஸ்வரன் விக்ரம் விபத்து ஒன்றில்(கழுத்துக்கு கீழே உணர்ச்சியற்றவராக பாதிக்கப்படுவதால் தனக்கு 24- மணிநேரமும் உதவி செய்ய ஒருவரை தேர்ந்தெடுக்க, நேர்காணால் மேற்கொள்கிறார் விக்ரம். தேர்வுக்கு வரும் சீனு இயல்பாக, மனசுல பட்டதை அப்படியே பேசும் ஒருவனாக இருப்பதால், அந்த ஒரு தகுதியை வைத்து சீனு’வை வேலைக்கு சேர்த்துக்கொள்கிறார் விக்ரம். பிறகு இவர்கள் இருவர் வாழ்வில் நிகழும் அருமையான(மனதை மயக்கும் வகை) சம்பவங்களே “தோழா” கதை.

குற்ற வழக்கிலிருந்து 4 மாத பரோலில் வரும் சீனு நற்சான்று பெற வக்கீல் விவேக் உதவியால் கோடீஸ்ரர் விக்ரமிடம் வேலைக்கு சென்று, விக்ரமின் உதவியாளர்(PA) கீர்த்தியை காதலிப்பது, கலாய்ப்பது பிரமாதம். விக்ரமுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவரை அகமகிழவைப்பது, எப்பவுமே ஏ.சி பங்களாவிலே இருக்காமல் ஊருக்குள் அழைத்து வந்து மகிழவைப்பது இப்படி அடுத்தடுத்து அன்பு காட்டி விக்ரமுக்கு உயிர் தோழனாகிறார் சீனு. சீனுவை மதிக்காத தங்கை, தம்பி இருவருக்கும் பிரச்சனை, அவர்களின் பிரச்சனையை விக்ரம் அறிந்து சீனுவை ஆனந்தகண்ணீர் விடவைப்பது, பதிலுக்கு விக்ரமின் ஆசையை, ஏக்கத்தை புரிந்துகொண்டு சீனு அசத்துவது அருமை. இதனால் கீர்த்தி சீனுவை காதலிப்பது, என இப்படி “பாஸிடிவ்” காட்சிகள்.

ஒளிப்பதிவு அற்புதம். வசனங்கள் அனுபவிக்கவைக்கின்றன. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் மீது உண்மையான அன்பு காட்ட ஓருவர் இல்லைன்னா – அவ்வளவுதான். “உனக்கு ஒருத்தரை புடிச்சுபோச்சன்னா அவங்கள சந்தோஷமாக வைச்சுக்க நீ ரொம்ப பாடுபடவ, என்று தமன்னா கார்த்தியிடம் கூறுவது இப்படி வசனங்கள் படத்துக்கு வலிமை தருகின்றது.

லீவு நாளில் குடும்பத்தினர் தயக்கம் ஏதுமின்றி “தோழா” படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து மகிழலாம். நாகார்ஜூன் முகம் ஒன்றிலியே, என்னமா நடிப்பை வழங்கியுள்ளார். பிரகாஷ்ராஜ் அமைதி ஆனால் கச்சிதமான நடிப்பு. படத்தில் இடம்பெறும் பெயின்டிங் காமெடி சூப்பர். டைரக்டர் வம்சி தரமான படத்தை இயக்கியுள்ளார். தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள்.

ஸ்பெஷல் பாராட்டு ஒளிப்பதிவாளருக்கு. “பாரீஸ் சாலைகளில், பல இடங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதமாக சிறப்பான பணி, ஈபில் டவர், இதர இடங்கள் ஆஹா,ஆஹா, அற்புதம் ஆனந்தம். மொத்தத்தில் “தோழா” திரைபடம் பார்வையாளர்களை திருப்திபடுத்தும், நல்ல கல்லா கட்டும்.

விமர்சனம்: பூரி ஜெகன்.

Leave a Response