“ஜீரோ” – திரைப்பட விமர்சனம்:

Zero Review
நடிகர்கள்: அஷ்வின் காக்குமனு, சிஷிவட, JD சக்ரவதி மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்கம்: ஷிவ் மோஹா, இசை: நிவாஸ் K பிரசன்னா, ஒளிப்பதிவு: பாபு குமார், படத்தொகுப்பு: சுதர்ஷன், கலை இயக்கம்: ராஜ மோகன், UFX: லோர்வன் ஸ்டுடியோஸ், பாடல்கள்: கபிலன் மற்றும் மதன் கார்கி, தயாரிப்பு: பாலாஜி காபா.

“ஜீரோ” படம் ஒரு புதுமையான கதைகளம். முதல் பாராட்டு கலை இயக்குனர் மற்றும் UFX வடிவமைப்பு – பிரமாதம். நன்மை செய்ய கடவுள் வருவார், எப்படியும் வந்துவிடுவார் என்பதை அதிகமாக பயமுறுத்தி உணர்த்தியுள்ள படம் தான் “ஜீரோ”. பெரும்பாலான தமிழில் வரும் பேய் படங்கள், ஆவி அல்லது பேய் என்று ஒரு கதா பாத்திரத்தின் மீது தான் கதையை எடுத்து சொல்லுவர். ஆனால் இந்த படத்தில் மனிதனின் பிறப்பின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது. “ஆதாம்-ஏவாள்” தவிர்த்து மற்றுமொரு மனிதர் இவர்களுக்கு இடையில் வாழ்ந்துள்ளார் என்பதை பற்றி சொல்லியுள்ளது “ஜீரோ”.

பாபுகுமாரின் ஒளிப்பதிவு அருமை. JD சக்கரவர்த்தி தனது நடிப்பில் மிளிர்கிறார். ஹீரோ காதலித்த பெண்ணை மணப்பது, தனியாக வாழும்போது அவன் மணைவிக்கு ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து அவளை காப்பாற்ற நம்பிக்கையுடன் போராடுவது தான் படத்தின் கதை.

ஹீரோ நடிப்பு ஓகே. ஹீராயின் சிஷிவட கண்களால் மற்றும் முகபாவனைகளால் அசத்திவிட்டார். ஹீரோ ஹீரோயின் முதல் சந்திப்பு ஒப்பிடவே முடியாத அழகான கவிதை போல இனிமை. நச்சரிப்பில்லாத வசனங்கள் அருமை. பின்னணி இசை நேர்த்தியாக உள்ளது. படத்தின் ஒரு காட்சியில், ஒரு காமுகன் தன்னுடைய கையில் புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் புத்தகத்தை தன்னுடைய கையில் வைத்திருப்பது தேவையற்றது மற்றும் கண்டிக்கத்தக்கது.

மொத்தத்தில் இளம் இயக்குனர் ஷிவ் மோஹாவின் “ஜீரோ” படம் போன்ற ஒரு படைப்பு வரவேற்கத்தக்கது, பாராட்டுகள் ஷிவ் மோஹா.

“ஜீரோ” புதுமையான படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு விடுமுறை விருந்து.

Leave a Response