சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ சீரீஸ் படங்கள், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது “அரண்மனை3” உருவாகி வருகிறது.
இப்படத்திற்காக சென்னை EVP ஃபிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது.
முதன்முதலில் சுந்தர்C யுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ள இப்படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சி பிரமாண்டமாக பதினொரு நாட்கள் படமாக்கப்பட்டது.
இதுவரை சுந்தர்சியின் படங்களில் “ஆக்ஷன்” action படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்தில் தான் மிக பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப்படத்துக்கு 2 கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப் படமாகியுள்ளது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இக்காட்சியில், ஆர்யா, ராக்ஷி கன்னா, சுந்தர்C, சம்பத், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்தனர். மேலும் இப்படத்தில் விவேக், ஆண்ட்ரியா, மனோபாலா, வின்சென்ட் அசோகன், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. குஜராத் ராஜ்கோட், சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
2021ல் சம்மர் ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாக உள்ளது. ‘அவ்னி சினிமாஸ்’ இப்படத்தை தயாரிக்கிறார்கள்.