கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் நடிகர்!

உலகையே தற்போது உலுக்கிவரும் விஷயம் கொரோனா. இந்த நோய் ஏழை, பணக்காரர், பிரபலமானவர், சாமானியன் என எந்த பாகுபாடுமின்றி யாரை வேண்டுமானாலும் தாக்கும் என்பதை நிரூபித்துள்ளது. ரஷிய நாட்டின் பிரதமர் மிக்கேல் மிஸ்ஸ்டின், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் குடும்பத்தினர், நடிகர் அனுப்பம் க்ஹெர் தாய், மனைவி மற்றும் உறவினர்கள், தமிழகத்தில் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் என பலரை தாக்கி வருகிறது. கொரோனாவால் தாக்கப்பட்டு பலர் குணமாகி வந்த நிலையில், பலர் மரணமும் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வந்துள்ள தகவல் சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு நடிகர் விஷாலின் தந்தையார் ஜி.கே.ரெட்டி, தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தினால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சமயம் நடிகர் விஷாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையில் விஷாலுக்கும் கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

விஷால் மற்றும் அவருடைய தந்தையாருக்கு சித்தா மற்றும் ஆயுர்வேதா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சிகிச்சையினால் பலன்பெற்று விஷால் மற்றும் அவருடைய தந்தையார் ஜி.கே.ரெட்டி ஆகியோர் பூரண குணமடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

மீண்டும் பழையபடி உடல் ஆரோக்கியத்துடன் வரும்படி விஷால் மற்றும் அவருடைய தந்தையார் ஜி.கே.ரெட்டி அவர்களுக்கு ‘ஒற்றன் செய்தி’ ஊடகம் வாழ்த்துகிறது.

Leave a Response