தனுசு ராசி நேயர்களே! யோகி பாபு ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

1960 கேரளாவிலிருந்து சென்னை நோக்கி ரயிலில் வந்து சீட்டு கம்பெனியை ஆரம்பித்து, மலையாளத்தில் பல வெற்றி படங்களை தயாரித்தவர் ‘கோகுலம்’ கோபாலன். தற்போது தன்னுடைய முதல் தமிழ் படத்தை தயாரித்துள்ளார் கோபாலன். இப்படத்தினை இயக்குநர் சந்தான பாரதியின் மகனான நடிகர் சஞ்சய் பாரதி இயக்கி ஆதற்கு ‘தனுசு ராசி நேயர்களே’ என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய படக்குழுவினர், இப்படத்தில் யோகி பாபு நகைச்சுவை அதிகமாக பேசப்படும்…அவர் ஆஹா ஓஹோ என்று நடித்துள்ளார்…படம் முழுக்க இளைஞர்கள் விரும்பி பார்க்கக்கூடிய வகையில் இருக்கும் என்று கூறினார்கள். சமீபத்தில் படத்தை பார்த்த சினிமாக்காரர்கள், இப்படத்தில் யோகி பாபு மிகவும் குறைந்த காட்சிகளில் வந்து போவதாக சொல்கின்றனர். அதுவும் அவருடைய காமெடிக்கு இந்த படத்தில் இடம் கொடுக்கப்படவில்லையாம், காரணம் படத்தில் உப்புசப்பு இல்லாத காமநெடி தானாம்!

இதை பற்றி படம் பார்த்தவர் ஒருவர் படக்குழுவினரிடம் விசாரிக்கையில், யோகி பாபு இப்படத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நடித்தார் என தெரிவித்தனராம். மற்றப்படி படத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் மது அருந்தும் காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இடம் பெற்றிருக்கிறதாம். படம் சுமார் தான் என்று அறிந்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தினை திரையிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க தயங்குவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படம், யோகி பாபுவிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் விளம்பரத்திற்காக மட்டுமே அவரை பயன்படுத்தியுள்ளது என்று திரைத்துறை வியாபாரிகள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, இப்படத்தின் இசை வெளியீடு வரை, விளம்பரங்களில் இடம் பெற்ற யோகி பாபுவின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், சமீபகால விளம்பரங்களில் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய படங்களும், காட்சிகளும் விளம்பரத்திலிருந்து நீக்கப்பட்டதால் யோகி பாபு சற்று அப்செட்டாம்.

Leave a Response