உடற்பயிற்சி கலையில் புது அங்கீகாரம் பெற்ற முதல் தமிழர்

கடந்த 16 மற்றும் 17 ம் தேதிகளில் மும்பையில் நடைபெற்ற போட்டியில் உலகளவில் 42 நாடுகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்களுக்கென ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நடிகரும், மாடலுமான நடிகர் பரத்ராஜ் கலந்து கொண்டு, தனது பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். பின்னர், 6 பிரிவுகளிலும் தங்கம் வென்றவர்களுக்கு, உலகளவில் நடைபெறும் Mr.ஒலிம்பியா, Mr.யுனிவர்ஸ போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ப்பதற்கு தகுதியான ப்ரோ கார்டு சுற்று நடத்தப்பட்டது. அதிலும் பரத்ராஜ் வெற்றிவாகை சூடினார்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை பெசன்ட்நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய IFBB ப்ரோ 2019 சாம்பியன் பரத்ராஜ், பல்வேறு தடைகளை தாண்டி, சவால் மிகுந்த இந்த IFBB ப்ரோ 2019 சாம்பியன் பட்டத்தை வென்றது மிகவும் பெறுமையாக இருப்பதாகக் கூறினார். மேலும், இதுவரையில் நடைபெற்ற ப்ரோ சாம்பியன்ஷிப் போட்டிகளில், தென்னிந்தியாவில் இருந்து முதல் முறையாக நான் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்சியளிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், உலகளவில் நடைபெறும் Mr. ஒலிம்பியா, Mr.யுனிவர்ஸ போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்ப் பதற்கான தகுதியாக இந்த IFBB ப்ரோ 2019 விருது உறுதுணையாக இருக்கும் என்றும் பரத்வாஜ் தெரிவித்தார்.

2014 முதல் பரத்ராஜ், இந்தியாவின் உடலமைப்பு மற்றும் உடற்பயிற்சி விளையாட்டு வீரராக இருந்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் பிரபலங்களுக்கு தனித்துவமான தனிப்பட்ட உடற்பயிற்சியினை தனது ‘தி பாடி ஸ்டுடியோ’ மூலம் அளித்து வருகிறார்.

ஆர்வமுள்ள வளரும் நடிகராக, ‘பூஜை’, ‘மெர்சல்’, ‘அடங்க மறு’, ‘சங்கத்தமிழன்’ போன்ற படங்களில் நடித்துள்ள பரத்ராஜ், கூடைப்பந்தாட்டம் முதலான பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளையும் எடுத்துள்ளார். 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இந்திய கூடைப்பந்தாட்ட அணியில் இடம்பெற்ற அவர், 2012 முதல் 2015 வரை பாரத வங்கி அணி சார்பில் விளையாடியுள்ளார்.

மேலும், தமிழ் திரைப்பட பிரபலங்களான விக்ரம், சரத்குமார், வரலட்சுமி சரத்குமார், விக்ரம் பிரபு, பிந்துமாதவி, பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோருக்கு சிறப்பு பிரிவு பயிற்சியாளராகவும் உள்ளார்.

இதுமட்டுமல்லாமல், உலகளவில் உடல்கட்டழகு தொடர்பான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளையும் பரத்ராஜ் பெற்றுள்ளார்.

Leave a Response