விஜய் ஏன் கவர்னரை சென்று பார்த்தார்?

நாட்டின் 76 – வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை தி.நகர் உள்ள கமலாலயத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் மற்றும் குஷ்பு சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினர்.‌ இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பின்பு நடிகர் சரத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ;

2026 -ம் ஆண்டு தமிழகத்தில் ஒரு சிறந்த ஆட்சியை அமைக்க பாடுபட சபதம் ஏற்போம் என்ற செய்தியை சொல்ல வேண்டும். டங்ஸ்டன் சுரங்கம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசும் , அண்ணாமலையும் தான் காரணம்.

விஜய் அவர்கள் குறித்து நான் அதிகமாக கருத்து சொல்வது இல்லை. ஆறு மாத காலம் அவர் களத்தில் இருந்த பிறகு என்ன செய்யப் போகிறார். கொள்கை ரீதியாக என்ன செய்யப் போகிறார். தமிழகத்தை வேறொரு பாதையில் எப்படி எடுத்து செல்ல போகிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய் முதல் மாநாட்டில் கவர்னர் இருக்க வேண்டாம் என சொன்ன பின்னர் கவர்னரை எதற்கு நேரில் சென்று சந்தித்தார் என தெரியவில்லை. தமிழகத்தில் 13 பேருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

Leave a Response