சண்டைக்கு ரெடியாகும் ரஜினி!

தலைப்பை படித்தவுடன் ரஜினி போருக்கு ரெடியாகிவிட்டார், அரசியலுக்கு வர நேரம் அமைந்துவிட்டது என்று யோசிக்குறீங்க என்று தெரிகிறது. அது தான் கிடையாது.

ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த தேர்தல் நேரத்தில் மும்பையில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு அதே மும்பையில் தொடங்கி முழுமூச்சாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நம்முடைய ‘ஒற்றன் செய்தி’ நிருபர், இயக்குனர் முருகதாஸிடம் இப்படத்தை பற்றி இன்று விசாரித்தார். அப்போது முருகதாஸ் கூறியதாவது, ‘தர்பார் படத்தின் படப்பிடிப்பு முழுமூச்சாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓர் இரு தினங்களில் மும்பையின் ஒரு முக்கிய பகுதியில் ரஜினி சாரின் சண்டைக்காட்சி படமாக்கப்பட உள்ளது. அந்த சண்டை காட்சியினை, இரட்டையர்களான பிரபல ஸ்டாண்ட் இயக்குநர்கள் ராம் மற்றும் லக்ஷ்மன் இயக்குகிறார்கள்.’ இவ்வாறு இயக்குநர் முருகதாஸ் நம்மிடம் தெரிவித்தார்.

ரஜினி இந்த சண்டைக்கு தான் ரெடியாகுகிறார் என்பதை தான் நாங்க தலைப்பில் குறிப்பிட்டோம்.

Leave a Response