அட ஆர்யா சாயிஷா ஹனிமூன் போகவில்லையாம்!

நடிகர் ஆர்யா சமீபத்தில் தான் நடிகை சாயிஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நாளை ஆர்யாவும், சாயிஷாவும் ரஷியா பக்கத்தில் இருக்கும் அஜர்பெய்ஜன் நாட்டிற்கு செல்கின்றனர். என்னடா புதுமண தம்பதி ஹனிமூன் கிளம்பறாங்களா அப்பிடின்னு யோசிப்பீங்க! அது தான் இல்லை.

ஆர்யா, சாயிஷா ஆகிய இருவரும் இணைந்து தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்கள். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘டெடி’ என பெயரிடப்பட்டுள்ளது. நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்று வந்தது.

இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ரஷியா அருகிலுள்ள அஜர்பெய்ஜன் என்னும் நாட்டில் நடக்கவிருக்கிறது. அஜர்பெய்ஜன் நாட்டில் நடக்கவிருக்கும் படப்பிடிப்புக்கு கிளம்பிய தொழில்நுட்ப கலைஞர்கள் அங்கு போய் சேர்ந்துவிட்டனர். ஆர்யா மற்றும் சாயிஷா நாளை இந்தியாவிலிருந்து படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் இந்த பயணம் படப்பிடிப்புக்கு மட்டுமே தவிர ஹனிமூன் பயணம் இல்லையாம்.

Leave a Response