இணை இயக்குனர்கள், இருவர் சேர்ந்து ஒரு படம் எடுத்தால்? அதுதான் “இருவர் ஒன்றானால்”!

DSC_0684

“தீனா” முதல் “கஜினி” வரை இயக்குநர் முருகதாஸிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ஏ.எம்.சம்பத்குமார். பொதுவாக இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர்கள் டைரக்டராக ஆவது தான் வழக்கம். ஆனால் இவர், ரமணா ஆர்ட்ஸ் என்ற புதிய நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். அதற்கு காரணம் இந்த படத்தின் கதை தான்.

இவர் தயாரிக்கும் முதல் படத்திற்கு முருகதாசின் இன்னொரு துணை இயக்குனரான அன்பு.ஜி என்பவரை இயக்குனராக அறிமுகம் செய்கிறார். அன்பு.ஜி-யின் கதையை கேட்ட மாத்திரத்தில், தான் இயக்கும் படத்தை தள்ளி வைத்து விட்டு, உடனே இந்த கதையை தானே தயாரிப்பது என முடிவு செய்து படப்பிடிப்பையும் முடித்து விட்டார். முருகதாசின் இரு உதவியாளர்கள் உருவாக்கும் இந்த கதைக்கு “இருவர் ஒன்றானால்” என்ற தலைப்பை சூட்டியுள்ளார்கள்.

காதலை மையப்படுத்திய கதை என்பதால் புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார்கள். பல முகங்களை தேடி இறுதியாக கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளையே தேர்வு செய்துள்ளார்கள். ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவரான P.R.பிரபு நாயகனாக தேர்வானார். விஸ்காம் ஸ்டூடண்டான மாலினி, மாடலான தீக்ஷிதா என இரு கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். மேலும் ஷைலேந்திரி, கார்த்திகா, ஜனனி, பிரவின், அமர் மற்றும் பல மாணவ மாணவிகள் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு நடிக்க வைத்துள்ளார்கள்.

“வேட்டைக்காரன்”-ல் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது…’ என்ற பாடலை பாடிய குருகிருஷ்ணா இப்படத்தில் இசைஅமைப்பாளராக அறிமுகமாகிறார். விளம்பரப்பட ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் : பரமேஸ் கிருஷ்ணா.

சென்னையில் இந்துஸ்தான் காலேஜ் மற்றும் பெங்களூரில் பல இடங்களில் படமானது.