தமிழக மீனவர் பற்றிய ஆவணப்படத்துக்கு ரஷ்ய விழாவில் விருது பெற்ற தமிழ் இயக்குனர்!

IMG_8853

குறும்பட இயக்குனர்கள் திரைத்துறைக்கு வந்து சாதித்த வண்ணம் உள்ளனர். இந்த பட்டியலில் இணையும் புதுமுக இயக்குனர் ஜி.வெங்கடேஷ் குமார். இவரின் முதல் படம் வெளியாகும் முன்பே பல தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரம் இவருக்கு கிடைத்து வருகிறது. இவர் ஏற்கனவே செய்த குறும்படங்கள் பல விழாக்களுக்கு அனுப்பப்பட்டு அங்கு விருதுகளையும், பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

கடந்த வாரம் இந்திய – ரஷ்ய கூட்டுறவில் விருது வழங்கும் கலைவிழா ரஷ்யாவில் உள்ள அறிவியல் கலைக்கூடத்தில் நடந்தது. விழாவில் 250க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள் திரையிடப்பட்டது. இதில் நீளம் பட இயக்குனர் ஜி.வெங்கடேஷ் குமாரின் “விட்டில் பூச்சிகள்” என்ற ஆவணப்படமும் திரையிட்டு காட்டப்பட்டது.

250 படங்களிலிருந்து மொத்தம் ஐந்து படங்கள் விருதுக்கு தேர்வு செய்யபட்டது. அந்த ஐந்து படங்களில் ஜி.வெங்கடேஷ் குமாரின் விட்டில் பூச்சிகள் படத்திற்கும் ஒரு விருது கிடைத்தது. தமிழ் மீனவ மக்களின் அவலங்களை அலசி, சமாதி கட்டப்பட்ட உண்மைகளை சபைக்கு கொண்டு வரும் முயற்சி தான் இந்த விட்டில் பூச்சிகள்.

முயற்சி வெற்றி பெரும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விடியல் வரும். மீனவர்களின் வாழ்வு மலரும், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று விருது பெற்ற வெங்கடேஷ் குமார்.