இனி அவ்வப்போது உங்களை தொடர்ந்து சந்தித்து கொண்டிருப்பேன் – சிவகார்த்திகேயன்

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தினை காமடி இயக்குனர் என்ற பெயர்பெற்ற எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசையின் சிறப்பு, ஒரு பாடலை இசையமைப்பாளர் அநிரூத் பாடியுள்ளார்.

படம் முழுக்க காமெடி என்பதை நிரூபிக்கும் வகையில், படத்தில் யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர் என ஒரு காமெடி நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றனர்.

மிஸ்டர் லோக்கல் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அந்த பதரிமையாளர்கள் சந்திப்பில் படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவைக்கு கேரண்டி மற்றும் பொருட்செலவில் பிரமாண்டம் என்பதை குறிக்கும் வகையில் இருக்கிறது.

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேசும்போது, தான் இனி அவ்வப்போது தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்தித்து கொண்டிருப்பேன் என்றார். அதாவது இனி வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் தான் நடிக்க இருப்பதாக குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும்போது, “நான் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும்போது, எனக்கு கைகொடுத்து உதவியது இந்த சிவகார்த்திகேயன். இதை அவரிடம் பலமுறை சொல்லுவிட்டேன், இருந்தாலும் அதை நான் இந்த மேடையில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.” என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன், “பலர் நன்றி மறந்திருக்கும் வேளையில், நீங்கள் என் மீது நன்றி நினைத்து அதை இந்த மேடையில் குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி.’ என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார். இவர் நன்றி மறந்தவர்கள் என்று குறிப்பிட்டது ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ மதன் என்று நீங்கள் புரிந்து கொண்டால், அதற்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்பது பின்குறிப்பு.

முன்பு பேசிய ரோபோ சங்கர், பத்திரிகையாளர்கள் இந்த சந்திப்பில் கைகளை தட்டி ரசிக்காமல் அமைதியாக இருப்பதை ஒரு குறையாக சொன்னார். அவருக்கு பதில் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கூறியதாவது, “நான் பத்ரிகையாளர்களுடன் பல படங்கள் சேர்ந்து பார்த்துள்ளேன். அவர்கள் காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தால் ரசிப்பார்கள். நகைச்சுவை காட்சிகள் இருக்கும்பட்சத்தில் அதை கை தட்டி ரசித்துள்ளதை நான் பார்த்துள்ளேன். ஒரு நாளைக்கு நான்கு படங்கள் அல்லது நான்கு பிரஸ் மீட் வைத்தால் எப்படி? அவர்களும் மனிதர்கள் தானே. நாம் ஒரு நல்ல படம் மட்டுமே பார்ப்போம், அவர்கள் அப்படி இல்லையே, எத்தகைய படமாக இருந்தாலும் அவர்கள் அதை பார்க்கிறார்கள். அவர்கள் மனநிலையையும் யோசிக்கணும்.” என்று ரோபோ சங்கருக்கு புரியவைத்து பேசினார் சிவகார்த்திகேயன்.

Leave a Response