சிந்துபாத் திரைப்படத்திற்கு தடை என்பது தவறான தகவலா?

விஜய் சேதுபதி நடிப்பில், கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் முடிவுற்று திரைக்கு வரும் தருவாயில் உள்ள திரைப்படம் ‘சிந்துபாது’. இத்திரைப்படம் வெளியாவத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை. கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படமான ‘பாகுபலி தி கண்க்ளுஷன்’ திரைப்படத்தின் தமிழ் மொழி உரிமையை அப்படத்தின் முதன்மை தயாரிப்பாளரான ‘ஆர்கா மீடியா வர்க்ஸ்’ நிறுவனத்திடமிருந்து வாங்கியது.

படத்தின் உரிமையை வாங்கிய கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ரூ.17.60 கோடி பண பாக்கி வைத்துள்ளதாக அப்படத்தின் முதன்மை தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா வர்க்ஸ் நிறுவனம் ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின், விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி நடித்துள்ள ‘சிந்துபாது’ மற்றும் கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரு படங்களையும் 24.04.2019 வரை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள XXIV’வது கூடுதல் சிறப்பு நீதிபதி அமர்ந்துள்ள நகர சிவில் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர். இந்த இரு படங்களுக்கும் தடை உத்தரவு கோரிய மனுவை விசாரித்த நீதிபதி, 04.05.2019 அன்று தேதியிட்டு உத்தரவில் மனுவை தள்ளுபடி செய்தார்.

தடை உத்தரவு கோரிய மனு தள்ளுபடியானதை அடுத்து, ஆர்கா மீடியா வர்க்ஸ் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மனுவினை அளித்துள்ளது. அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆர்கா மீடியா வர்க்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய முழு பணத்தையும் கே புரொடக்ஷன்ஸ் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து ‘தடையில்லா சான்று’, ‘பண பாக்கி இல்லா சான்று’ மற்றும் வழக்கு செலவு ஆகியவையே நீதிமன்றம் பெற்று கொடுக்க வேண்டும் வேண்டும், அதுவரை ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘சிந்துபாது’ ஆகிய இரு திரைப்படங்களையும் வெளியிடப்படாமல் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலம் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘சிந்துபாது’ ஆகிய இரு திரைப்படங்களும் வெளியாவதற்கு தற்போதுவரை எந்த ஒரு நீதிமன்ற தடையும் இருப்பதாக தெரியவில்லை. இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ‘சிந்துபாது’ திரைப்படங்கள் வெளியிட தடை என்பது ஒரு தவறான தகவலாகவே தெரிகிறது.

Leave a Response