கேங்ஸ் ஆப் மெட்ராஸ் திரை விமர்சனம்….

கதாநாயகி பிரியங்கா ரூத் தன்னுடைய பெற்றோர் மற்றும் இரு சகோதிரிகளுடன் குடும்பமாக ஜெயா என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்து வருகிறார். இப்ராஹிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அசோக் மீது ஜெயாவிற்கு காதல் ஏற்பட, அதை ஜெயாவின் குடும்பத்தார் எதிர்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ஜெயா, இப்ராஹிமை மணக்கிறார். இப்ராஹிமை மணப்பதற்காக ஜெயா இஸ்லாமியராக தன்னை மாற்றிக்கொண்டு, ரசியாவாக தன்னுடைய பெயரை மாற்றி கொள்கிறார். ராவுத்தர் என்ற ஒரு மிக பெரிய தாதாவும், தொழிலதிபருமான இயக்குனர் வேலு பிரபாகர் நிறுவனத்தில் பணியில் சேருகிறார் இப்ராஹிம்.

ஒரு நாள் வீட்டின் வாசலில் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்படுகிறார் இப்ராஹிம். இதை பார்த்த ரசியா விரக்தி அடைகிறார். இப்ராஹிம் சுடப்பட்ட காரணத்தை அறிந்து கொள்ளும் ரசியா, தன்னுடைய கணவர் கொலை செயப்பட காரணமானவர்களை பழி வாங்கும் எண்ணத்தில் இறங்குகுறார். தன்னை தயார்படுத்திக்கொள்வதற்காக மும்பை சென்று, அங்கு வசிக்கும் தாதா டேனியல் பாலாஜியை சந்திக்கிறார் ரசியா.

மீண்டும் சென்னை திரும்பிய ரசியா, தன்னுடைய கணவரை கொன்றவர்களை என்ன செயகிறார், அப்போது என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை.

ரசியாவின் நடிப்பு அபாரம். குறிப்பாக பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிடும் லொது, தன்னுடைய எதிரிகள் இருவரை பார்த்தவுடனான ரியக்ஷன், அவர்களை சுட்டு வீழ்த்திவிட்டு மீண்டும் வந்து பிரியாணியை சாப்பிடும் காட்சி நச். சண்டை காட்சிகளில் நடிக்க தன்னை நன்றாக தயார் செய்துகொண்டுள்ளார் பிரியங்கா. மொத்தத்தில் பிரியங்கா ரூத், தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு. எப்போதும் சற்று அளவுக்கு அதிகமாக நடிக்கும் அசோக், இந்த படத்தில் மீட்டர் அளவு தாண்டாமல் அளவோடு நடித்துள்ளார். இயக்குனர் வேலு பிரபாகர் ஒரு புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். வேலு பிரபாகர் நடை உடை மற்றும் நடிப்பு ஒரு புதிய கோணம். வாழ்த்துக்கள் வேலு பிரபாகர் சார். எப்போதும் போல் டேனியல் பாலாஜி, ரெகுலர் நடிப்பு ஆனால் அளவுக்கு மீறாத நடிப்பு தான். அரசியல்வாதியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், நம் மனசில் நிற்கிறார். போதை மருந்து வியாபாரம் செய்யும் லாலா சேட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நடிப்பில் நியாயம் செய்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை புதுமுகமான கார்த்திக் கையாண்டுள்ளார். கார்த்திக்கின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு மிக பெரிய ப்ளஸ். ஒளிப்பதிவில் ஒரு புதிய நிறம் தெரிகிறது. ஒரு நல்ல ஒளிப்பதிவாளராக கார்த்திக் பேசப்படுவார். படத்தின் பாடல்களுக்கு புதுமுகம் ஹரியின் இசை நியாயம் சேர்த்துள்ளது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு ஒரு கூடுதல் சப்போர்ட்.

இதுவரை வெற்றி தயாரிப்பாளர் என்று பேசப்பட்டு வந்த சி.வி.குமார், தான் ஒரு இயக்குனர் எம்பத்தை தன்னுடைய முந்தைய படமான ‘மாயவன்’ மூலம் நிரூபித்தார். அதே சி.வி.குமார், தன்னால் ஒரு நல்ல ஆக்ஷன் கதையை எழுதவும் தெரியும், அதை நன்றாக இயக்கவும் தெரியும் என இந்த ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம் மூலமாக நிரூபித்து விட்டார். படம் போதை வஸ்து பொருட்கள் வியாபார பின்னணியில், வன்முறை காட்சிகள் கொஞ்சம் அடங்கியுள்ளதால் இந்த படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்திற்கான மதிப்பீடு: 3.75/5

Leave a Response