தயாரிப்பாளர் அசோக்கை காவு வாங்கிய படத்தலைப்பு சென்டிமென்ட்…

IMG-20171121-WA0124
இன்று மாலை முதல் கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது நடிகர் சசிகுமார் அவர்களின் மச்சானும், சசிக்குமாரின் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ நிர்வாகத்தின் நிர்வாக தயாரிப்பாளரான அசோக் தற்கொலை மற்றும் அதற்கு காரணமான பைனான்சர் மதுரை அன்புச்செழியன் பற்றி தான்.

இன்று மதியம் தற்கொலை செய்துகொண்ட அசோக் தன்னுடைய இருந்து கடிதத்தில், தான் திரைப்பட தயாரிப்புக்காக மதுரை அன்புச்செழியனிடம் வாங்கிய கடனுக்காக தான் அனுபவித்த மிரட்டல்கள், அசிங்கங்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்த பிரபல தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன்(ஜி.வி) தற்கொலைக்கு இதே அன்புச்செழியன் தான் காரணம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சரி இவருடைய தற்கொலைக்கும் படத்தலைப்பின் சென்டிமெண்டுக்கும் என்னடா சம்மந்தம் அப்பிடினு யோசிப்பீங்க.

2001’ம் ஆண்டில் விஜயகாந்த் நாயகனாக நடிக்க திருப்பதிசாமி இயக்கிய படம் தான் ‘நரசிம்மா’. இந்த படத்திற்கு :’நரசிம்மா’ என்று பெயர் வைத்தவுடனேயே சில இன்னல்கள் நேர்ந்ததாக சொல்லப்படுகிறது. பலர் அந்த படத்துர்க்கு தலைப்பை மாற்ற அறிவுதியுள்ளனர். இருப்பினும் அதே பெயருடன் தான் படம் முடிக்கப்பட்டது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் பாடத்துன் இயக்குனர் படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு மாதம் முன்பு ஒரு கார் விபத்தில் சென்னையில் இறந்துவிட்டார்.

நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய மகனுக்கு திப்பு என்று பெயர் வைத்ததாகவும், அந்த குழந்தை உடல்நலம் சரியில்லாமல் மிக அவஸ்தைப்பட்டதாக அவரே தெரிவுத்தார். பின்னர் அவருக்கு அறிமுகமில்லாத ஒரு பெரியவர் ராஜ்கிரனை சந்தித்து உன்னுடைய மகனின் பெயரை உடனடியாக மாற்றவும், இல்லையென்றால் அவருடைய அந்த குழந்தைக்கு கேடு என தெரிவித்துள்ளார். உண்மை உணர்ந்த ராஜ்கிரண் உடனடியாக அந்த குழந்தையின் பெயரை மாற்றினார்.

தொழிலதிபர் விஜய் மலையா சிறந்த செல்வாக்குடன் இருந்தார். ஒரு நேரத்தில் இங்கிலாந்திலிருந்து திப்பு சுல்தான் உபயோகித்த வாளை வாங்கிய பிறகு தான் அவருடைய வியாபாரத்தில் பெருத்த நஷ்டத்தை சந்தித்தார்.

இந்த மாதிரி சென்டிமெண்டுகள் பல உள்ளன.
IMG_20171121_222812
தற்போது சசிகுமார் நாயகனாக நடிக்க அப்படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ சார்பாக லீனா லலித்குமார் தயாரிக்கிறார். அந்த படத்தின் டைட்டில் நேற்று தான் அறிவிக்கப்பட்டது. அந்த டைட்டில் ‘அசுரவதம்’. அசுரர்கள் என்பவர்கள் ரிஷிகளை மற்றும் நல்லவர்களை அழிக்க முயற்சிப்பவர்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய அசுரர்களில் சிலரை அழைத்தவர் தான் நரசிம்மர்.

இதை தான் அசுரவதம் என்றும் சொல்வர். இந்த படத்தின் டைட்டில் ‘அசுரவதம்’ என்று சொன்னவுடன் முதலிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தவர் இன்று தற்கொலை செய்துகொண்ட அசோக் தான். என்ன நினைத்தாரோ இந்த அசோக், அவர் நினைத்ததை போலவே நேற்று வைக்கப்பட்ட படத்தின் டைட்டில் ‘அசுரவதம்’ இந்த அப்பாவி தயாரிப்பாளரை பைனான்சர் அன்புச்செழியன் வழியாக வதம் செய்து அவரை காவு வழங்கிவிட்டது.

இனியும் சசிகுமார் மற்றும் ‘கம்பெனி புரொடக்ஷன்ஸ்’ சற்று சந்தித்து இந்த டைட்டில் தேவைதானா என முடிவு செய்யவேண்டும். புராணங்கள் சொல்வதிலும் சில சென்டிமென்ட் காரணங்கள் இருக்கின்றன. இனியும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் தங்களுடைய படங்களுக்கு தலைப்பை வைக்கும் போது சற்று சிந்தித்து வையுங்கள்.

மிஸ்டர் சசிகுமார், இப்போதாவது உங்கள் மச்சான் வேண்டாம் என்று சொன்ன அந்த ‘அசுரவதம்’ டைட்டிலை மாற்றுங்கள்.

Leave a Response