ஏப்ரல் 5 ஆம் தேதி “குப்பத்து ராஜா”வாக வரும் ஜி.வி.பிரகாஷ்..!

பல வெற்றி பாடல்களுக்கு நடனம் அமைத்த பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன் எம், சரவணன் டி, சிராஜ் ஆகியோர் தயாரித்துள்ள குப்பத்து ராஜா ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், பாலக் லால்வானி மற்றும் பார்த்திபன் ஆகியோருடன், யோகிபாபு மற்றும் பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில், மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில், பிரவீன் கேஎல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது இந்த குப்பத்து ராஜா.

சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா படத்தின் ட்ரைலர் YouTubeல் லட்சக்கணக்கான ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டிருக்கிறது.

“உண்மையில் நான் ‘லோக்கல்’ என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ளவில்லை, மாறாக அதை ‘நேட்டிவிட்டி’ என்று தான் அழைப்பேன். நம்மை சுற்றியுள்ள மக்கள் கிராமங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் நேட்டிவிட்டியை பார்த்து வியக்கிறார்கள். சேரிகள் என்பவை உண்மையில் சென்னை மாநகரத்தின் இயற்கையான கூறுகள் தான்.

டிரைலரில் நாம் பார்த்ததை விட ஆழமான கதை படத்தில் உள்ளது. கதையுடன் இணைந்து பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்கும். ஹீரோ மற்றும் வில்லன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால், படத்தில் தான் அதை பார்க்க வேண்டும். ஏனெனில் அதில் சில வியக்கதகு தருணங்கள் இருக்கும்.” என்கிறார் இயக்குனர் பாபா பாஸ்கர்.

 

Leave a Response