சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் என்ஜிகே. எஸ். ஆர் பிரபுவின் ட்ரீம் வாரிய பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த வருடமே வருவதாக இருந்தது. மேலும் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.
இதனை தொடர்ந்து சூர்யா கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், செல்வராகவனின் NGK திரைபடம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தார்கள்.
அவர்களின் கேள்விக்கு தற்போது அதிகாரபூர்வ பதில் வெளியாகியுள்ளது என் ஜி கே திரைப்படம் வருகின்ற மே 31ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இருப்பினும் இந்த தேதியாவது உறுதியானதுதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.