ஆக.10ல் வெளியாகிறது அஜித்தின் நேர்கொண்ட பார்வை..!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும், தல அஜித் நடித்துவரும் பிங்க் படத்தின் ரீமேக் ‘நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில், தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் இயக்குனர் வினோத், பாலிவுட் சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கை ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். ஷ்ரதா ஸ்ரீநாத், வித்யா பாலன், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா டரியங் ஆகிய நடிகைகள், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அஜித் இந்த படத்தில் முதல்முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதால், படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது தல ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Leave a Response