நடிகை நயன்தாரா, ராதாரவி விவகாரம் : திமுக பொறுப்புகளில் இருந்து ராதாரவி தற்காலிக நீக்கம்..!

கொலையுதிர் காலம் பட ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசுகையில், படத்தின் நாயகி நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார். நயன்தாரா நல்ல நடிகை தான். நயன்தாராவை பற்றி வராத செய்தி எல்லாம் இல்லை. அதையும் தாண்டி திரையுலகில் நிலையாக நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளில் மறந்துவிடுவார்கள். அதனால் அதை எல்லாம் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா என்றார் ராதாரவி.

நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் பேடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடத் தோன்றுபவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடத் தோன்றுபவரையும் போடலாம் என்றார் ராதாரவி.

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை. இந்நிலையில் படத்தை துவங்கும் போதே விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார் ராதாரவி. கொலையுதிர் காலம் பட விழாவில் கலந்து கொண்டு படத்தை பற்றி பேசியதை விட மற்றவர்களை அசிங்கப்படுத்தியது தான் அதிகம்.

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் திமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஸ்டாலின் ராதாரவிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

Leave a Response