இந்தியாவின் சூப்பர்ஸ்டார் நரேந்திர மோடி – அமைச்சர் செல்லூர் ராஜூ புகழாரம்..!

இந்தியாவின் சூப்பர்ஸ்டார் மோடி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், கருணாநிதி வல்லவர் என்று தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் வல்லவரும் இல்லை, நல்லவரும் இல்லை என்றார்.

இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. சு. வெங்கடேசன் நல்ல வேட்பாளர். அதாவது, அவர் தமிழில் நல்லா எழுதுவார். கவிதை பாடுவார் . வரலாற்றுடன் நல்லா எழுதக்கூடியவர். அரசியல் வேண்டாம் என்று சென்ற அவரை, ஆளே இல்லை என்பதால் அவரை அழைத்து வந்துள்ளார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.

பிரதமர் மோடி இந்தியாவின் பாதுகாவலர் என்றும் அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் போல விளங்குவதாகவும் புகழாரம் சூட்டினார்.

பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு முன்பு வரை திமுக தான் வெற்றி பெறும் என்று சொன்னவர்கள், தற்போது அதிமுக வெற்றி பெறும் என சொல்லி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். எனவே, அ.தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Response