தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆகும் விஷாலின் “அயோக்யா”..!

விஷால் நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கத்தில் உருவாகி வந்த ‘அயோக்யா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வரும் நிலையில் நேற்று ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியானது. தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை தினத்தில் இந்த படம் வெளியாவதால் நல்ல ஓப்பனிங் கிடடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான்’இரும்புத்திரை’ மற்றும் ‘சண்டக்கோழி 2’ ஆகிய திரைப்படங்கள் விநியோகிஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய தொகை கொடுத்து ஸ்க்ரீன்சீன் நிறுவனம் பெற்றுள்ளது

விஷால், ராஷிகண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்

Leave a Response