ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையிள் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார்.
இதற்கான விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ் ஆர் பிரபு ,படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
36 வயதினிலே, மகளிர் மட்டும்,நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகியப் படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகவிருக்கும் காமெடி படத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும் இந்த கதையில் வித்தியாசமான கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருக்கிறார். இவருடன் நடிகை ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கல்யாண். இந்தபடத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை வீர சமர் கவனிக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார்.