எதிர்க்கட்சிகளின் கூட்டணி கருவிலேயே கலையும் – ஸ்டாலினுக்கு சவால் விடும் தமிழிசை சவுந்திரராஜன்..!

எதிர்க்கட்சிகளின் கூட்டணி கருவிலேயே கலையும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவர் பேசுகையில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ரூ. 15 லட்சத்தை மீட்டு இந்திய மக்களின் வங்கி கணக்கில் செலுத்துவேன் என மோடி பொய் கூறினார்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்தே மோடி பிரதமரானார். எதிர்க்கட்சிகளாகிய நாம் ஒற்றுமையுடன் இருந்து மோடியை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார். இதற்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.

கொல்கத்தாவில் ஸ்டாலினின் அனல் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில் பிரதமர் யார் என பேச்சு எழும்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலையும். கருவிலேயே கலையும்.

ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். நீங்களா, நாங்களா என பார்த்துவிடுவோம். கேலிக்குரிய கூட்டணியை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்.

ரூ. 15 லட்சம் போடுவேன் என மோடி ஒரு போதும் சொன்னதில்லை என தமிழிசை தெரிவித்தார். இது போல் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவும் ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Response