திருவாரூர் மக்களுக்கு தேவை தே’ர்’தல் இல்லை தே’று’தல் தான் – தமிழிசை..!

திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான்,தேர்தல் அல்ல, இடைத்தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி எனதமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பின்னர் தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கேற்ப, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல் ராஜ், அனைத்து கட்சிகளிடமும் கருத்துகேட்பு நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதில், கஜா புயல் பாதிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் எனதிமுக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தின.

இதைத்தொடர்ந்து, அறிக்கையின் அடிப்படையில்திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்துதிருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.

திருவாரூர் தேர்தல் ரத்தானதற்குபல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது புயலுக்குப்பின்புஅங்கே தங்கிமருத்துவநிவாவரண பணி செய்தஅனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர்மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான்,தேர்தல்அல்ல,அவர்கள்வாழ்வைமீட்டெடுப்பதுதான் தேவை ஓட்டெடுப்பு அல்ல,தேர்தல் ஆணையத்திற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Response