சிம்புவை தொடர்ந்து புரட்சி தளபதி விஷாலுடன் கைகோர்க்கும் சுந்தர்.சியின் புது படத்தை லைக்கா புரொடுக்க்ஷன் தயாரிக்கவுள்ளது.
பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. இந்த படத்தின் ரீமேக்காக இயக்குனர் சுந்தர் சி நடிகர் சிம்புவை வைத்து “வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமாக லைக்கா புரொடுக்க்ஷன் தயாரித்து வருகிறது இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுந்தர் சி நடிகர் விஷாலை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் மேலும் ஓர் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. நடிகர் விஷால் சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே “ஆம்பள” மெகா ஹிட் வெற்றிப்படத்தில் நடித்தார். மேலும் சுந்தர் சி விஷால் கூட்டணியில் “மதகத ராஜா” என்ற படம் உருவானது ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால் , இயக்குனர் சுந்தர் சியுடன் தளபதி விஷால் மூன்றாவது முறையாக இணைத்துள்ள இச்செய்தியை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.