ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்..!

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசுக்கு எதிராக பொய்குற்றச்சாட்டை முன்வைத்ததற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காங்கிரஸ் கட்சியினர் ரஃபேல் விமான ஒப்பந்தத்திற்கு எதிராக அடுக்கடுக்கான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் அதற்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

மத்திய அரசின் மீதும் பிரதமர் மீதும்பொய் குற்றச்சாட்டை சுமத்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும், அவரது கூட்டணி கட்சிகளும் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். தனது தவறுக்காக ராகுல் காந்தி நிச்சயம் பதவி விலக வேண்டும் எனதெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சைவ – அசைவ பிரியர்களை பிரித்து வைப்பது எல்லா கல்வி நிறுவனங்களிலும் இயல்பானது தான்.அதில் தவறு கூறவோ அதை தீண்டாமை என அழைக்கவோ முடியாது.

5 மாநில தேர்தலில் பா.ஜ.க விற்கு பின்னடைவு ஏற்பட்டதை வைத்து ரஜினி பா.ஜ.க வின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக கூறுவது தவறு.ரஜினியின் ஒரு படம் ஓடாவிட்டாலும் இன்னொரு படம் வெற்றி பெறுவது போல் பா.ஜ.க வும் மீண்டு வரும் என தெரிவித்தார்.

Leave a Response