கருணாநிதி சிலை திறப்பு விழா : ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு..!

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. ஏற்கனவே இருந்த அறிஞர் அண்ணாவின் சிலையும் சீரமைக்கப்பட்டு அன்றைய தினமே திறக்கப்படுகிறது.

இந்த விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திமுக முடிவு செய்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், இதில் பங்கேற்பதற்காக அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி விழாவில் பங்கேற்க கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் திமுக தோழமை கட்சிகள் மேகதாது அணை தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு கமல்ஹாசன் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், திமுக கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஜினிகாந்த் பின்பற்றி வரும் நிலையில் அவருக்கும் இந்த சிலை திறப்பு விழாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response