2.0 : நான்கு நாளில் ரூ.400 கோடி வசூல் சாதனை..!

நான்கு நாளில் 2.0 படம் வசூலில் ரூ.400 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 2.0 படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் பாகிஸ்தான் உள்பட உலகம் முழுவதும் கடந்த வியாழன்று வெளியானது.

மொத்தம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. 2.0 முதல் நாளில் மட்டும் உலகமெங்கும் ரூ.120 கோடி வசூல் செய்திருந்தது. 3டி தொழில்நுட்பம், 4டி ஆடியோ என ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படம் வெளியாகிய 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படத்தின் வசூல் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Response