சூப்பர் ஸ்டார் ரஜினியால் தான் இந்த சாதனை படைக்க முடியும் :2.0 படத்திற்கு சூர்யா வாழ்த்து..!

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அது ரஜினி தான் என 2.0 படத்திற்கு சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் 2.0. இந்திய திரையுலகில் அதிக பணம், பொருள் செலவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படப்பிடிப்பு 3டி கிராஃபிக்ஸ் பணிகளுக்காக நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. பல நாள் கனவாக இருந்த இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சூர்யா புகழாரம் :

மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்கிற ஆசையை ரஜினி நிறைவேற்றியுள்ளார். திரைப்படத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்துவிட்டது இந்த படம்.
ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி தான். நான் எப்போது ஷங்கரின் பார்வையை கண்டு பிரம்மித்திருக்கிறேன். அவர் சினிமாவின் சக்தியை நம்பவைத்து விடுவார்.

அதே போல் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மாற்றியமைத்துள்ளார். அதனால் கண்டிப்பாக நம் காதுகளுக்கும் 2.0 விருந்தாக இருக்கும். அதே போல் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தின் இமாலய சாதனையை நம்பவே முடியவில்லை. அக்‌ஷய் குமாருக்கு இந்த படம் தமிழில் மிகப்பெரிய வரவேற்பு.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டி வாழ்த்துகிறேன். 2.0 படம் திரையில் 3டி-யில் ஆச்சரியப்படுத்தும், மகிழ்விக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என சூர்யா தெரிவித்துள்ளார்.

Leave a Response