சில நாட்களூக்கு முன் தமிழகத்தின் டெல்டா பகுதிகளை சூறையாடிவிட்டு போன கஜா புயலால் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரடியாக சந்தித்து தேமுதிக அறிவித்த ஒரு கோடி நிவாரண பொருட்களை வழங்கியுள்ளோம். இம்மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மதுக்கடை மூடப்பட்டிருந்தாலும் திருட்டுத்தனமாக வியாபாரம் நடக்கிறது. அதை தடை செய்ய வேண்டும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் அனைவரும் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இதிலும் அரசியல் உள்ளது. இவ்வழக்கில் 25 வருடங்களாக தண்டனை பெற்றுவருகிறாரகள். அதை கருத்தில் 7 பேரையும் விடுவிக்கவேண்டும் ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்திலும் அரசியல் உள்ளது.
டெல்டா பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை போராட்டத்திற்கு தூண்டுவதே திமுகதான். திமுக சார்பில் மக்கள் பிரச்சனைக்கு அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டால் அதில் தேமுதிக நிச்சயமாக பங்கேற்கும். ஆனால் அப்பொதுக்கூட்டத்தை அறிவாலயத்தில் நடத்தக் கூடாது. மாறாக ஒரு பொது இடத்தில்தான் நடத்த வேண்டும். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.