நாடாளுமன்ற தேர்தலுடன், 20 தொகுதி இடைத்தேர்தலை நடத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும் – எச்.ராஜா..!

நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, இடைத்தேர்தலை தனியாக நடத்தினால் வாக்காளர்களுக்கு நிறைய பேர் பணம் கொடுப்பார்கள். இது பெரிய முறைகேட்டிற்கு வழிவகுக்கும்.

ஆகவே, நாடாளுமன்ற தேர்தலுடன், 20 தொகுதி இடைத்தேர்தலை நடத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும். பணப் பலம், ரூ.20 டோக்கனை கொடுத்து ஜெயிப்பது என்பது நடக்காது. இதனை ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே கூறி வருகிறேன்.

தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தை பின்பற்ற வேண்டும். இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற பிரகாசமாக வாய்ப்பு இருக்கிறது. கூட்டணி வைப்பது குறித்து பிறகு முடிவு செய்வோம்.

இதற்கிடையே, தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. முன்னதாக, புயலை காரணமாக காட்டி தமிழக தலைமைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதால், தற்போதைய 5 மாநில தேர்தல்களுடன் இடைத் தேர்தலை சேர்த்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response