பிரபாகரனாக நடிக்கும் பாபி சிம்ஹா : “சீறும் புலி” பர்ஸ்ட் லுக் வெளியானது..!

பாபி சிம்ஹா நடிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ‘சீறும் புலி’என்ற பெயரில் திரைப்படமாக தயாராகிறது. இந்த படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் சார்பிர் தயாரித்து இயக்குகிறார் வெங்கடேஷ் குமார்.

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி சீறும் புலி படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அதில் நடிகர் பாபி சிம்ஹா ஒரு புலியின் தலையில் கை வைத்தபடி, நாற்காலியில் அமர்ந்திருப்பது போல் உள்ளது.

விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களும், பிரபாகரனின் அபிமானிகளும் இந்த முதல் பார்வை போஸ்டரை வரவேற்றுள்ளனர்.

Leave a Response